டி.இ.ஓ., நியமனம்
மதுரை: மதுரை தொடக்கக் கல்வி டி.இ.ஓ., வாக வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய சிவக்குமார் பணி ஓய்வு பெற்றார். ஒரே நாளில் மாநில அளவில் 14 டி.இ.ஓ.,க்கள் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.