உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் இல்லாமல் கஷ்டம்; ஆய்வக நுட்புனர் சங்கங்கள் கோரிக்கை

 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் இல்லாமல் கஷ்டம்; ஆய்வக நுட்புனர் சங்கங்கள் கோரிக்கை

மதுரை: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ரத்தப்பரிசோதனை முடிவுகளை பதிவேற்றம் செய்வதற்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேண்டும் என ஆய்வக நுட்புனர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வக நுட்புனர் 3 பணியிடத்தை நிரந்தரப்படுத்த வேண்டும். நிலை 3 பணியில் உள்ளவர்களை நிலை 2ஆக பதவி உயர்வு வழங்குவதுடன் கூடுதலாக 280 பணியிடங்களை வழங்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவப்பணி இயக்ககத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்குவதைப் போல பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருந்தாளுநர், நுண்கதிர் நுட்புனர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். உலக சுகாதார மைய உத்தரவு படி ஆய்வக நுட்புனர்களுக்கு வெள்ளைகோட் வழங்க வேண்டும். 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் ஒப்பந்த முறையில் பணியிடம் நிரப்பியதை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2025 - 26க்கான ஆய்வக மேற்பார்வையாளர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் ரத்தப்பரிசோதனை முடிவுகளை நாங்களே பதிவேற்றம் செய்வதற்கு தாமதமாவதால் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு என தனியாக நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை