உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முத்துத்தேவர் பள்ளியில் தினமலர் பட்டம் வழங்கல்

 முத்துத்தேவர் பள்ளியில் தினமலர் பட்டம் வழங்கல்

திருநகர்: மதுரை திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வழங்கப்பட்டது. சண்முகசுந்தரம் பேசியதாவது: மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், தினமலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர் கல்விக்கு எளிதாக செல்லும் வகையில் மிகச் சிறந்த வழிகாட்டியாக, மாணவர்களின் உற்ற நண்பனாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பட்டம் இதழ்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் எண்ணற்ற பொது அறிவு பகுதிகள், தேர்வுகளுக்கு பயன்படும் பல்வேறு பகுதிகள் இடம் பெறுகின்றன. பட்டம் இதழை வாசித்து மாணவர்கள் பல்வேறு சாதனைகளை புரிய வேண்டும் வேண்டும் என்றார். தலைமை ஆசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !