மதுரை மேற்கில் தி.மு.க., போட்டி அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை: 'மதுரை மேற்கு தொகுதியில் வரும் தேர்தலில் தி.மு.க., தான் போட்டியிடும்' என அமைச்சர் மூர்த்தி பேசினார்.மதுரையில் நடந்த தி.மு.க., நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். இதை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.மதுரை மேற்கில் ரூ.100 கோடிக்கு திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு ரூ.40 கோடிக்கான பணிகள் நடக்கின்றன. வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெற்று தரும் தொகுதியாக இது இருக்கும். இங்கு தி.மு.க., வேட்பாளர் தான் நிறுத்தப்படுவார். முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார்.