உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் மாணவியர் சந்திப்பு

முன்னாள் மாணவியர் சந்திப்பு

மதுரை: மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதன்முறையாக முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் விஜயகுமாரி தலைமை வகித்தார். துணை முதல்வர் பழனி வரவேற்றார். 1963ல் கல்லுாரி தொடங்கியது முதல் கடந்தாண்டு வரை பயின்ற மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சையது சுல்தான், சவடமுத்து, ஜெகன்மோகன், மூர்த்தி, பூமி கவுரவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., முஸ்தபா பேசுகையில், ‘‘மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், நல்ல பழக்கங்களை ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். படித்த கல்வி நிறுவனங்களை முன்னாள் மாணவர்கள் பாதுகாக்க வேண்டும். கல்வி, தொழில் வளர்ச்சி, தொழில் முனைவோருக்காக பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்றார். விரிவுரையாளர் சையது அலி பாத்திமா தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் ஜெயமணி நன்றி கூறினார். முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் தமிழரசி, இணைச் செயலாளர்கள் மோகன்குமார், அழகுரம்யா, துணைத் தலைவர் கனிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் இசக்கி, ஹரிணி, சையது அலி பாத்திமா, கவிதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை