உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன்களின் கட்டடங்களை புதுப்பிக்க எதிர்பார்ப்பு

பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன்களின் கட்டடங்களை புதுப்பிக்க எதிர்பார்ப்பு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி, வாலாந்துாரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் பாழடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை உடனே புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வாலாந்துார் போலீஸ் ஸ்டேஷன், போலீசார் குடியிருப்பு வீடுகள் சொக்கத் தேவன்பட்டியில் உள்ளன. தொடர் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்ததால், இந்த ஸ்டேஷன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாலாந்துார் ஊராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்படுகிறது.வத்தலக்குண்டு ரோட்டில் பழைய தாலுகா அலுவலக கட்டடத்தின் பின் பகுதியில் உசிலம்பட்டி நகர் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.,க்கள் ஏட்டு, போலீசார் என 43 பேர் பணிபுரிகின்றனர். பதிவேடுகள் பராமரிப்பு, விசாரணைக்கு வருவோர், சந்தேக நபர்கள் விசாரணை, பாதுகாவலுக்கு வரும் பட்டாலியன் போலீசார் என யார் வந்தாலும் இந்த ஸ்டேஷனில்தான் ஆஜராக வேண்டும்.ஆரம்ப காலத்தில் போதுமானதாக இருந்த இந்த கட்டடம், தற்போது 'நெருக்கடி' ஸ்டேஷனாக மாறிவிட்டது. இதனால் அடிப்படை வசதி பற்றாக்குறையாக உள்ளது. விசாரணைக்கு கொண்டு வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் வழியில்லை. அவற்றை உசிலம்பட்டி கண்மாய்கரை, உத்தப்பநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளனர்.பாதுகாப்பு இல்லாமல் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால் அவை துருப்பிடித்து குப்பையாக மாறி வருகிறது. இரண்டு ஸ்டேஷன்களுக்கும் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !