உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உழவர் சந்தை வெள்ளி விழா

உழவர் சந்தை வெள்ளி விழா

மதுரை: தமிழகத்தில் முதலில் துவங்கப்பட்ட மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையின் 25 வது ஆண்டு நிறைவையொட்டி விழா நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி முன்னிலை வகித்தார். மதுரை விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, வேளாண்மை, தோட்டக்கலை துணை இயக்குநர்கள் ராணி, பிரபா, வேளாண்மை விற்பனைக்குழு வாரிய முன்னாள் தலைவர் கணேசன் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளாக சந்தையில் காய், கனிகளை விற்பனை செய்யும் விவசாயிகள், வாங்கும் நுகர்வோர் கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ், உதவி நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை