உள்ளூர் செய்திகள்

 வேலி அமைப்பு

மேலுார்: திருச்சி- மதுரை நான்கு வழி சாலையில் தாமரைப்பட்டி ரோட்டோரம் தன்னுாற்று கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. அதனால் வாகனங்கள் தண்ணீருக்குள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து வாகனங்கள் தண்ணீருக்குள் கவிழாதவாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தடுப்பு கம்பி வேலிகள் அமைத்தது. அதிகாரிகள், தினமலர் இதழுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை