உரக்கடைகள் ஆய்வு
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உரக்கடைகளை வேளாண் இணை இயக்குநர் முருகேசன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில் ''உரம் விற்பனை செய்யும் தனியார் கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், விவசாயிகளின் ஆதார் எண் பெற்று பி.ஓ.எஸ்., இயந்திரத்தின் மூலம் பில் வழங்கிய பின்பே உரம் வழங்க வேண்டும். கோடை பயிர்களுக்குத் தேவையான உரம் இருப்பில் உள்ளது'' என்றார். தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் பரமேஸ்வரன் உடனிருந்தார்.