உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தர்காவில் கொடியேற்றம்

 தர்காவில் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவில், நேற்று இரவு சந்தனக்கூடு கொடியேற்று விழா நடந்தது. வழக்கமாக கொடியை வண்டியில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் எடுத்து சென்று, மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் ஏற்றுவர். ஆனால், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதித்ததால், சந்தனக்கூடு கொடியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இந்நிலையில், நேற்று இரவு 9:45 மணிக்கு, மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றப்பட்டது. இதற்கு, 'அவர்களை கொடியேற்ற அனுமதித்துள்ளீர்கள்; நாங்களும் தீபம் ஏற்றுவோம்' என, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெண் ஒருவர் மட்டும் போலீசார் அனுமதியுடன், பழனி ஆண்டவர் கோவில் வாசல் முன், இரவு 10:00 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Suresh
டிச 23, 2025 03:52

முஸ்லிம்கள் பிரதி வெள்ளிக்கிழமை தொழுகை செய்ய மசூதிக்கு செல்வர். ஒருவரும் தவறுவதில்லை. கிருத்துவர் பிரதி ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வழிபடுவர். ஹிந்துக்கள் யாருமோ கோயில்களுக்கு வாரத்தில் ஒருநாள் என செல்வதில்லை. அப்படி சென்றால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும். அரசியல் கட்சிகளும் மதிக்கும். அதை விடுத்து ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் கோயிலுக்கு போனால் இப்படித்தான் உரிமைகள் சிறிது சிறுதாக பறிபோகும். இனி மேலாவது திருந்துங்கள். உஷார் ..உஷார் .உஷார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை