உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாளை கொடியேற்றம்

 நாளை கொடியேற்றம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நாளை (மே 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசியில் 17 நாட்கள் திருவிழா நடக்கும். வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி, உருண்டு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். நாளை கொடியேறியவுடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவர். தினமும் பலவகை வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் அம்மன் பவனி நடக்கும். மே 26 பால்குடம், தீச்சட்டி, மே 27 பூக்குழி, ஜூன் 2 தேரோட்டம், ஜூன் 3 வைகையாற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. நிர்வாக அலுவலர் ராஜா, கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி