மாணவர்களுக்கு இலவச விடுதி
மதுரை: மதுரை அரசு சட்டக்கல்லுாரி அருகேயுள்ள என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு இலவசமாக தங்கிப் பயில விரும்புவோர் நேரடியாக படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் தங்கி படிக்கலாம். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். விவரங்களுக்கு 77080 64983ல் தொடர்புகொள்ளலாம் என செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.