இலவச ஹேண்ட்பால் முகாம்
மதுரை: மதுரை திருநகர் அண்ணா பூங்காவில் பேணியன் பவுண்டேஷன், திருநகர் மதர்குளோப் ஹேண்ட்பால் அகாடமி சார்பில் ஏப்.17 முதல் மே 31 வரை கோடைகால இலவச ஹேண்ட்பால் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. 21 வயதுக்கு கீழ் உள்ள ஆடவர், மகளிர் பங்கேற்கலாம். 30 நாட்கள் பயிற்சியும் அடுத்த 15 நாட்கள் திருநகர் ஹேண்ட்பால் லீக் போட்டிகளும் நடக்கும். முன்பதிவு: 82206 67830.