லிப்ட் கொடுத்து வழிப்பறி
புதுார் : புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளலுார் ரமேஷ் 45. மாவு மில் உரிமையாளர். மதுரையில் உறவினரை சந்தித்துவிட்டு அதிகாலை சொந்த ஊர் செல்ல புதுார் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். டூவீலரில் வந்த 4 பேர் மாட்டுத்தாவணியில் இறக்கி விடுவதாக கூறி 'லிப்ட்' கொடுத்தனர். சிப்காட் வாசல் அருகே இறக்கிவிட்டு ரமேஷின் அலைபேசியை பறித்து தப்பினர். இதுதொடர்பாக வில்லாபுரம் பூபதிராஜ் 18, புதுார் செண்பகராஜ் 18 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவரை புதுார் போலீசார் கைது செய்தனர்.