மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மதுரை: மதுரை அரசு மியூசியத்தில் உலக சதுப்பு நில விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வாசகம் எழுதுதல் போட்டி நடந்தது. கட்டுரைப் போட்டியில் ஒத்தகடை அரசுப்பள்ளி மாணவி ஜெசிகா முதலிடம், சோழவந்தான் அரசுப் பள்ளி லத்திகா 2ம் இடம், மாநகராட்சி பொன்முடியார் பள்ளி தர்ஷினி 3ம் இடம் பெற்றனர். சதுப்பு நில வாசகம் எழுதும் போட்டியில் ராகவி முதலிடம், தரணிஸ்ரீ 2ம் இடம், ஜான் ஹால்வின் 3ம் இடம் பெற்றனர். ஓவியப் போட்டியில் சாராதேவி முதலிடம், கீர்த்திகாஸ்ரீ 2ம் இடம், தரணி 3ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா பரிசு, சான்றிதழ் வழங்கினார். மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஒருங்கிணைத்தார்.