உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் கோரிக்கையை விளக்கினார். ஐ.சி.டி.எஸ்., ஊழியர் உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வாசுகி பங்கேற்று பேசினார்.தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள், கணினி இயக்குனர்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்கள், நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர், துாய்மை காவலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ