மகிழ்ச்சி தினம்
மதுரை: மதுரை தானப்பமுதலி தெரு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் முதியோருக்கு உணவு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர் இந்திரா நன்றி கூறினார். சாய்ராம் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இல. அமுதன், ரமேஷ்குமார் பங்கேற்றனர்.