உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவன் காயத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு; : உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மாணவன் காயத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு; : உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : மதுரையில் ஒரு பள்ளி யில் மாணவன் கீழே விழுந்ததில் காயமடைந்ததற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரையை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு:எனது 17 வயது மகன் மதுரையில் ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்குச் செல்ல படிக்கட்டில் ஏறியபோது படி இடிந்து விழுந்தது. மகன் கீழே விழுந்தார். எனது மகன் உட்பட 3 மாணவர்கள் காயமடைந்தனர். மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் மகன் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். காயத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: அரசு தரப்பின் பதில் மனு, எப்.ஐ.ஆர்.,மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்ததில், படிக்கட்டு இடிந்து விழவில்லை. மனுதாரரின் மகன் பால்கனிக்கு சென்று பழங்களை பறிக்க முயன்றபோது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். பள்ளியின் படிக்கட்டு சரியாக உள்ளது. மனுதாரரின் மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மன வேதனை, வலியை கருத்தில் கொண்டு ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயலர் ரூ.50 ஆயிரம் இழப்பீடாக மனுதாரருக்கு வழங்கியுள்ளார். பள்ளி நிர்வாகம் ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க முன்வந்தது. அதை மனுதாரரின் அறிவுறுத்தலின் பேரில், அவரது வழக்கறிஞர் ஒப்புக்கொள்ளவில்லை.மனுதாரர் கோரும் இழப்பீடு தொகையை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இழப்பீடு கோரி, சட்டத்திற்குட்பட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை உண்டு. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ