உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்திரை திருவிழா பாதுகாப்பு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சித்திரை திருவிழா பாதுகாப்பு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'சித்திரை திருவிழாவிற்கு போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மருத்துவ சேவை, நடமாடும் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.'இதுவரை எந்த புகாரும் இல்லை. விளம்பரம் தேடும் நோக்கில் மனு செய்யப்பட்டுள்ளது,' என அரசு தரப்பு தெரிவித்தது.நீதிபதிகள்: அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதும் அவசர கதியில் இங்கு மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதுவரை திருவிழாவில் எவ்வித பிரச்னையும் இல்லை. மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி