மேலும் செய்திகள்
மாநில முதல்வர் கோப்பை போட்டி: மாணவர்கள் அசத்தல்
07-Nov-2025
திருநகர்: இந்தியா ஹாக்கி அணியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் நேற்று நடந்த போட்டிகளில் 18 பள்ளி, கல்லுாரிகள் கிளப் அணிகள் பங்கேற்றன. போட்டிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தனர். மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனியே நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் கப்பலுார் அரசு கள்ளர் பள்ளி மாணவியர் அணி முதலிடம், திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி 2ம் இடம் பிடித்தன. மாணவர்களுக்கான போட்டியில் திருநகர் இந்திராகாந்தி பள்ளி முதலிடம், முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம் வென்றனர். கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகளில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி முதலிடம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி அணி 2ம் இடம் பிடித்தன. கிளப்களுக்கு இடையிலான போட்டியில் திருநகர் ஹாக்கி கிளப் முதலிடம், திருப்பரங்குன்றம் ஹாக்கி கிளப் 2ம் இடம் பெற்றன. நடுவர்களாக ஹரிஹரன், பாலமுருகன், ரபீக், யோகேஷ், செந்தில் செயல்பட்டனர். மதுரை மாவட்ட ஹாக்கி கிளப் செயலாளர் ரமேஷ் போட்டி ஏற்பாடுகள் செய்திருந்தார்.
07-Nov-2025