விதைப்பண்ணை அமைக்க அழைப்பு
பேரையூர் : சேடபட்டி வட்டாரத்தில் வேளாண்துறை மூலம் விதைப்பண்ணைகள் அமைத்து சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயியின் விருப்பத்தின் பேரிலும், சான்றளிப்பு நடைமுறைகளை பின்பற்றியும் தரமான விதைகளை உற்பத்தி செய்து தர சம்மதிப்போரின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்படும். இதில் அனைத்துப் பயிர்களிலும் தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்யப்படும்.இப்பண்ணைகளில் உற்பத்தி செய்யும் விதைகளை நிர்ணயம் செய்த விலையில் கொள்முதல் செய்வர்.சிறுதானியங்களுக்கு கிலோவுக்கு ரூ30, பயறுவகைகளுக்கு ரூ25, எண்ணெய் வித்துகளுக்கு ரூ25, உற்பத்தி மானியம் வழங்குவதால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண் விரிவாக்கமையத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் சேரலாம் என, உதவி இயக்குநர் இராமசாமி தெரிவித்துள்ளார்.