உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கராத்தே போட்டி

 கராத்தே போட்டி

மதுரை: கோவாவில் 7வது எஸ்.ஜி.கே.எஸ் கோவா கப் 2026 க்கான தேசிய அளவிலான கராத்தே, சிலம்பப்போட்டி நடந்தது. இதில் மதுரை மாணவர்கள் பங்கேற்றனர். கராத்தே போட்டி கட்டா பிரிவில் கபிலேஷ், ஆதித்யன், இளந்திரையன், தனஞ்செயன், கபிலன் ஆகியோர் தங்கப்பதக்கம், கிருத்திக் ராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சிலம்பப் போட்டியில் சந்தோஷ், வெற்றிவேலன், பிரஜன்குமார் தங்கப்பதக்கம், நிபின் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கோஜுரியோ உலக கராத்தே சோபுக்காய் பள்ளி இந்திய கிளை தலைமைப் பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஏற்பாட்டைச் செய்திருந்தார். கராத்தே பள்ளி மாவட்ட செயலாளர்கள் அங்குவேல், பாலகாமராஜன், முத்துராஜா, தணிகைவேல் முருகன், சந்தோஷ், ஆதித்யன், கார்மேகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ