உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

 வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

மதுரை திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, 'இம்பீச்மென்ட்' எனப்படும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., - காங்., அடங்கிய 'இண்டி' கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் லோக்சபா சபா நா யகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட் மதுரை கிளை மூத்த வழக்கறிஞர்கள் உட்பட 154 வழக்கறிஞர்கள் லோக்சபா சபாநாயகருக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை; தவறானவை. நீதித் துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல். நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்க வேண்டாம். ஆரம்பத்திலேயே நிராகரித்து, சட்டத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என, கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !