உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வழக்கறிஞர்கள் உழவாரப்பணி

 வழக்கறிஞர்கள் உழவாரப்பணி

மதுரை: மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலில், திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினத்தை முன்னிட்டு, வழக்கறிஞர்கள் குழு சார்பில் உழவாரப்பணி நடந்தது. கோயிலின் மேல் தளங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்கறிஞர்களுடன் பக்தர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். நிர்வாகம் சார்பில் திருநாவுக்கரசு நாயனாருக்கு பூஜை நடந்தது. கோயில்களை காக்க அப்பர் என்ற திருநாவுக்கரசர் தோற்றுவித்த உழவாரப்பணி பெருமை குறித்து ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மாநில துணைத் தலைவர் சுந்தரவடிவேல் பேசினார். ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் கோகுல்நாத், மதனகோபால், ஆஞ்சநேய சேகர், சரோஜா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !