உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் குளிர்ந்த மதுரை

மழையால் குளிர்ந்த மதுரை

மதுரை: மதுரையில் நேற்று மதியம் இடியுடன் பெய்த மழையால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. மதுரை நகரில் கருமேகங்கள் சூழ்ந்து பட்டப்பகலை, அந்தி மாலையாக்கியது. மதியம் 2:15 மணிக்கு இடிமின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. மாட்டுத்தாவணி, அண்ணா பஸ்ஸ்டாண்ட், தல்லாகுளம், கோரிப்பாளையம், கரிமேடு, பெரியார் பஸ்ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு என நகரெங்கும் நல்ல மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அணைகளில் நீர்மட்டம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையில் 2303 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 297 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 42.16 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையின் நீர் இருப்பு 1130 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 309 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையில் நீருமில்லை, நீர்வரத்தும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ