உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனைகூரை இடிந்த விவகாரம் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை அரசு மருத்துவமனைகூரை இடிந்த விவகாரம் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம் மற்றும் பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு புற நோயாளிகளுக்கான சீட்டு பதியும் 100 வது வார்டு கூரையின் கான்கிரீட் பூச்சு நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. அந்நேரம் பணியாளர்கள் வராததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்விவகாரம் குறித்து தானாக முன்வந்து பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவு:இடிந்த பகுதியின் பரப்பளவு எவ்வளவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதை புதுப்பிக்க அல்லது மறு கட்டுமானம் மேற்கொள்ள பொதுப்பணித்துறையின் ஆலோசனையை பெற வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவமனை டீன் அக்.15 ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ