உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மெர்க்கன்டைல் வங்கி சார்பில்அனைவருக்கும் வங்கி சேவைநாகமலை

மெர்க்கன்டைல் வங்கி சார்பில்அனைவருக்கும் வங்கி சேவைநாகமலை

புதுக்கோட்டை:தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாகமலைபுதுக்கோட்டை கிளை சார்பில் 'அனைவருக்கும் வங்கி சேவை' துவக்க விழா கரடிபட்டியில் நடந்தது.ஊராட்சி தலைவர் கரடியப்பன் வரவேற்றார். வங்கி நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் தலைமை வகித்தார். ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனர் விஸ்வநாதன் முன்னிலை வகிதார். ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சக்ரபர்த்தி துவக்கி வைத்து பேசுகையில், ''ஒருவர் எப்போது வங்கி கணக்கு துவக்குகிறாரோ அப்போதே அவர் கிராம முன்னேற்றத்தில் பங்கெடுக்கிறார். வங்கி கணக்கு மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது அரசு வழங்கும் நிதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூலி தொகைகளை மற்றவர்கள் கையாடல் செய்ய முடியாது. இத்திட்டத்தின் மூலம் கிராமத்தில் இருந்தவாறு 'ஸ்மார்ட் கார்டு' மூலம் சிறிய இயந்திரத்தின் உதவியுடன் வங்கி சார்பில் நியமிக்கப்படும் முகவர்களிடம் பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், சிறு சேமிப்பு தொகை செலுத்துதால் உள்ளிட்ட பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்,'' என்றார். வங்கி இயக்குனர்கள் மகேந்திரவேல், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி பொதுமேலாளர் செல்வன்ராஜதுரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிளை மேலாளர் சிவசுப்ரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை