தேசிய போட்டியில் மதுரைக்கு தங்கம்
மதுரை : குஜராத்தில் தேசிய அளவிலான காது கேளாதோர் சப் ஜூனியர் 16 வயது பிரிவினருக்கான இறகுபந்து போட்டி நடந்தது.இதில் மதுரை பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது ரிபாய் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். தலைமையாசிரியை ரம்யா லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெய் தன்ராஜ், காயத்ரி ப்ரியா பாராட்டினர்.