மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
திருப்பரங்குன்றம்: திண்டுக்கல்லில் மருத்துவ கட்டடங்களை திறந்து வைப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த சுகாதார அமைச்சர் சுப்ரமணியன், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். வார்டு வாரியாக நோயாளிகளுக்கான வசதிகளை கேட்டறிந்தார். காசநோயாளிகளுக்கு தரப்படும் உணவு, மருந்துகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைப்படி காசநோயாளிகளுக்கு 15 நாட்கள் வழங்கப்படும் எப்.75 எனப்படும் ஊட்டச்சத்து கஞ்சியை சுவைத்து பார்த்ததோடு சமையலறை, ஸ்டோர் ரூம் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்தார். நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, டாக்டர் ஜெய்கணேஷ் உடனிருந்தனர். தோப்பூர் வளாகத்தின்அருகில் கட்டப்பட்டு வரும் மத்திய அரசின்எய்ம்ஸ் மருத்துவமனையை அமைச்சர் பார்வையிடவில்லை.