தேசிய ஹாக்கிக்குமாணவர்கள் தேர்வு
வாடிப்பட்டி: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு 14 வயது பிரிவிற்கு கிருஷ்ணகிரியிலும் 19 வயதிற்கு ராமநாதபுரத்திலும் நடந்தது.பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சபிதன், சர்மா தேர்வாகினர். அடுத்த மாதம் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நடக்கும் தேசிய ஹாக்கியில் பங்கேற்கின்றனர். மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சுரேஷ் ஆகியோரை தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் ஆசிரியர்கள் வாடிப்பட்டி எவர்கிரேட் ஹாக்கி கிளப் உறுப்பினர்கள் பாராட்டினர்.