உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலிந்தோருக்கு புத்தாடை

நலிந்தோருக்கு புத்தாடை

மதுரை: மதுரையில் சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம் மற்றும் ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கி முதுநிலை மேலாளர் காயத்ரி, பேங்க் ஆப் பரோடா கிளை மேலாளர் ரூபா நலிந்தோருக்கு அரிசி, புத்தாடைகள் வழங்கினர். சென்ஸ் நிறுவனர் பதி தலைமை வகித்தார். அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திராபதி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டன. சக்தி மோகன், ஹரிஹரன், நாகராஜ், கீர்த்தனா, கண்ணப்பன், சந்திரகாந்தன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை