தினமலர் செய்தியால் புதிய டிரான்ஸ்பார்மர்
மதுரை: மதுரை செல்லம்பட்டி கோயிலாங்குளம் கிராம டிரான்ஸ்பார்மர் இடி விழுந்து பழுதடைந்ததால் செக்கானுாரணி மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகளை பழுதுநீக்கச் சொல்வது குறித்து அக். 24ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அலுவலகம் மூலம் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அன்றே வைக்கப்பட்டு இன்று (அக்.,26) மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் பாசனத்தண்ணீரை இயக்குவதற்கு மின்சாரம் கிடைத்த நிலையில் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.