உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தி.மு.க., விழாவில் மூக்குடைப்பு

 தி.மு.க., விழாவில் மூக்குடைப்பு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பொம்பன்பட்டியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த 'டிபன் கேரியர்' வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது ஒருவருக்கு மூக்குடைந்தது. இங்கு பொம்பன்பட்டி, அம்மச்சியாபுரத்தை சேர்ந்த பலர் 'டிபன்கேரியர்' வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கி 'டிபன் கேரியர்' வழங்கப்பட்டவுடன் முறையான திட்டமிடல் இல்லாததால் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்க முயற்சித்தனர். இதனால் தி.மு.க., நிர்வாகிகளுக்கும் வாங்க சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் பொம்மன்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் 42, என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை