உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

மேலுார்: பூதமங்கலம் ஊராட்சி மணியம்பட்டியில் இடையன் கருப்பு கோயில் பகுதி உள்ளது. இங்கு நுாறு நாள் பணியாளரைக் கொண்டு வாய்க்கால் துார்வாரும் பணி நடந்தது. அப்போது பூமிக்குள் இருந்து சத்தம் கேட்ட பகுதியைத் தோண்டி பார்த்தனர். அதில் முதுமக்கள் தாழி, பானை, மூடி மற்றும் ஓடுகள் கிடைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் நாகரிக மனிதர்கள் வாழ்ந்திருப்பது உறுதியாகிறது. அதனால் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்து புதைந்து கிடக்கும் வரலாற்று தகவலை வெளிக்கொணர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ