உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாட்டு வெடிகுண்டுடன் ஒருவர் கைது

நாட்டு வெடிகுண்டுடன் ஒருவர் கைது

பாலமேடு : சோழவந்தான் வனத்துறைக்கு பாலமேடு மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.வனச்சரகர் தீனதயாள் உத்தரவில் வன உயிரின பாதுகாப்பு குழு வனவர் வரதராஜன், காப்பாளர் வில்வக்கனி, காவலர் கிருஷ்ணமூர்த்தி அப்பகுதிகளை கண்காணித்தனர். அதில் ராமகவுண்டம்பட்டி ராசு 55, விலங்குகளை வேட்டையாட ஆங்காங்கே வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அவரது வீட்டிலிருந்த 25 முயல் கன்னி வலைகளை பறிமுதல் செய்தனர்.வனத்துறையினர் ஒப்படைத்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த பாலமேடு போலீசார், ராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !