உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரையில் ஒரு நாள் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம்

 மதுரையில் ஒரு நாள் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரையில் 3 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும். முதல் நாள் அனுமன் சேனா, இரண்டாம் நாள் ஹிந்து மக்கள் கட்சி, மூன்றாம் நாள் ஹிந்து முன்னணி சார்பில் நடக்கும். இந்தாண்டு செப்., 14ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. செப்.,16 வரை 3 நாட்கள் ஊர்வலம் நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்திருந்தன. அதேசமயம் செப்.,17ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கேற்ப போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியால் சிரமம் ஏற்படும் எனக்கருதிய போலீஸ் உயர்அதிகாரிகள், ஹிந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் 3 நாட்கள் தனித்தனியே ஊர்வலம் நடத்துவதற்கு பதில் செப்.,15ல் மட்டும் ஊர்வலம் நடத்த முன்வர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதை ஹிந்து அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. அதன்படி செப்.,15 காலையில் ஹிந்துமக்கள் கட்சி, மாலையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் மாசிவீதிகளில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ