பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
உசிலம்பட்டி: மதுரையில் இருந்து தேனி சென்ற அரசு பஸ்சை ராஜா 50, ஓட்டினார். நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணியளவில் வாலாந்துார் கண்மாய் அருகே வந்த போது பஸ் நிலைத் தடுமாறி கவிழ்ந்தது. இதில் துாத்துக்குடி குலேசேகரபட்டினம் கீழதாவரம் மனோகர்ராஜ் 45, இறந்தார். சிலர் காயமடைந்தனர். வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.