உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஒரு போன் போதுமே...

 ஒரு போன் போதுமே...

போதை இளைஞர்கள் மதுரை அண்ணாநகர் ஆலமரம் பஸ் ஸ்டாப் பின்புறம் காமராஜர் தெரு - சமயபுரம் கோயில் சந்தில் வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்குகூடி நின்று கஞ்சா அடிக்கின்றனர். அடாவடியில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். - குமாரி, அண்ணாநகர். ஆக்கிரமிப்பு அட்டகாசம் தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் தள்ளுவண்டி கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகனங்கள் அவ்வழியே செல்ல திணறுகின்றன. பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை. இனியாவது விடிவு கிடைக்குமா. - - அசோக், தெற்குவாசல். குப்பை எரிப்பு மேலுார் உறங்கான்பட்டியில், குடிநீர் தொட்டி அருகே மர்ம நபர்கள் குப்பையை எரிக்கின்றனர். இதனால் குடியிருப்போர் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ரமேஷ், உறங்கான்பட்டி. மோசமான ரோடு வில்லாபுரம் முதல் அவனியாபுரம் வரை ரோடு மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். புதிய தார் ரோடு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -- குமார், அவனியாபுரம். நிழற்குடை ஆக்கிரமி ப்பு ஒத்தக்கடை பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையின் முன் நான்கு சக்கர வாகனங்களை பார்க் செய்து விடுகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையைப் பயன்படுத்த முடியவில்லை. மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - - மூகாம்பிகை, அய்யர் பங்களா. கழிவுநீர் தேங்குகிறது எஸ்.எஸ்.காலனி பகுதியில் பல இடங்களில் மேன்ஹோல்களில் கழிவுநீர் கசிந்து ரோட்டில் தேங்குகின்றன. குடியிருப்போர் சுகாரதாரக் கேட்டிற்கு ஆளாகின்றனர். இதுகுறித்துகவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. -- ஸ்வேதா, எஸ்.எஸ்.காலனி. சமூக விரோதிகள் தொல்லை மதுரை பழைய குயவர் பாளையம் ரோடு பகுதியில்சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் கூட கஞ்சா போன்ற தடைசெய்த போதைப்பொருட்களை பொது இடத்தில் பயன்படுத்துகின்றனர். பெண்கள், குழந்தைகள் வெளியே வருவதற்கே பயப்படுகின்றனர். -- நாராயணன், காந்தி பொட்டல். தெருநாய்கள் தொல்லை தெப்பக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தனியாக செல்வோரை சேர்ந்து நின்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - - பிரகதீஸ்வரன், தெப்பக்குளம். சாக்கடை புறக்கணிப்பு ஆனையூரில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. இதில் எங்கள் பகுதியை மட்டும் புறக்கணித்து விட்டதால், தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம். எங்கள் பகுதியில் மேற்கண்ட அடிப்படைவசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். -- ஸ்ரீ நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், ஆனையூர். ரோட்டில் பள்ளம் டோக் நகர் பிரதான ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - - சரத்குமார், டோக் நகர். கேட்பாரற்ற கால்நடைகள் மதுரை ஆற்றுப்பாலம் பகுதியில் அனாதையாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடம் மோதி விபத்துக்குள்ளாகின்றன. மாநகராட்சி நிர்வாகிகள் கால்நடை காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - - நம்புமீனாட்சி, தல்லாகுளம். அடிப்படை வசதி தேவை குமாரம் ஊராட்சி சபரி கார்டன் பகுதியில் முறையான ரோடு, குடிநீர் வசதிகள் இல்லை. குப்பை அள்ள, சேகரிக்க ஆட்கள் வருவதில்லை. பிரச்னைகள் குறித்து சபரி கார்டன் நலச் சங்கம் சார்பில் அலங்காநல்லுார் பேரூராட்சி முதல் கலெக்டர் வரை மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வருவரா - குடியிருப்பு நிர்வாகிகள், சபரி கார்டன், குமாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ