உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உயிர்ம வேளாண்மை பயிற்சி

 உயிர்ம வேளாண்மை பயிற்சி

மதுரை: தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர் மகத்துவ மையத்தில் மல்லிகை, முருங்கை ஏற்றுமதி குறித்த பயிற்சி நடக்கிறது. இதில் விதைச் சான்றளிப்புத்துறை சார்பில் உயிர்மச் சான்றளிப்பின் முக்கியத்துவம், பயிர் ஊட்டச்சத்து நிர்வாகம், களை, பூச்சி, நோய் நிர்வாகம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், பூச்சிவிரட்டி, பீஜாமிதர்தம், மீன்அமிலம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. துறை உதவி இயக்குநர் மகாலட்சுமி, சான்றளிப்பு ஆய்வாளர் ஹரீஷ்குமார் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ