மேலும் செய்திகள்
கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா
17-Oct-2024
வாடிப்பட்டி : பரவை முத்துநாயகி அம்மன் கோயில் உற்ஸவ விழா அக்.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று அக்னி சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று (அக்.30) வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அய்யனார் கோயில் முன் பொங்கல் வழிபாடு, குதிரை எடுப்பு நடக்கிறது.அக்.31ல் கருப்பண்ணசாமி கோயில் முன் பொங்கல் வைத்து முளைப்பாரி ஊர்வலம், நவ.1ல் பெருமாள் கோயில் முன் பொங்கல் வழிபாடு, நவ.2 மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, நகர்வலம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
17-Oct-2024