வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரண்டு வண்டி மண் கொட்டினால் தீர்ந்து விடும் விஷயமாக இருந்தால் அவ்வாறு செய்து விடுங்கள் . எல்லா விதத்திலும் நன்மை பயக்கும்.
மேலுார்: நல்ல சுக்காம்பட்டி துவக்கப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.பூதமங்கலம் ஊராட்சி நல்ல சுக்காம்பட்டியில் துவக்கப்பள்ளி 50 ஆண்டுகளாக செயல்படுகிறது. இப்பள்ளியில் பெரிய சிவல்பட்டி, தேத்தாம்பட்டி, நல்ல சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மழை பெய்யும்போது, காம்பவுண்ட் சுவருக்கும் வகுப்பறைக்கும் இடையே பள்ளமாக உள்ளதால் மழைநீர் தேங்ககிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் தண்ணீரைத் தாண்டி வகுப்பறைக்குச் செல்லும் போது வழுக்கி விழுவதால் காயமடைகின்றனர்.பெற்றோர் ராமநாதன் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர் வற்ற 10 நாட்களுக்கு மேலாகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல், தண்ணீர் தொடர்பான தொற்று நோய்களால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.அதனால் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே வேலையாக உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க பல நாட்கள் ஆகிறது. எனவே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நிலவுகிறது. அதனால் மாணவர்களை பயத்துடனே பள்ளிக்கு அனுப்புகிறோம். பி.டி.ஒ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.பள்ளி வளாகத்தினுள் நிரந்தரமாக தண்ணீர் தேங்காதவாறு பேவர் பிளாக் கற்கள் பதிக்க கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பி.டி.ஒ., ராமமூர்த்தி கூறுகையில், வரக்கூடிய திட்டங்களில் பள்ளிக்கு முன்னுரிமை கொடுத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இரண்டு வண்டி மண் கொட்டினால் தீர்ந்து விடும் விஷயமாக இருந்தால் அவ்வாறு செய்து விடுங்கள் . எல்லா விதத்திலும் நன்மை பயக்கும்.