புரவி எடுப்பு திருவிழா
மேலுார் : அட்டப்பட்டி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று(செப்.27) நடந்தது. தும்பைபட்டியில் புரவி செய்யப்பட்டு ஏ.கோயில்பட்டி வழியாக பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று கோயில் காளைக்கு மரியாதை செய்யும் எருதுகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.