மேலும் செய்திகள்
குவாரி விதிமீறல் வழக்கு
22-Nov-2024
மதுரை; பட்டா நிலத்தில் சிலையை நிறுவ அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.ராமநாதபுரம் மாவட்டம் முஷ்டக்குறிச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் கந்தவேல் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:அறக்கட்டளைக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அவ்வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரி தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர், ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:அரசு தரப்பு,'அவ்வப்போது வெளியாகும் அரசாணைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசிடம் அனுமதி பெறாமல் சிலையை நிறுவ முடியாது,' என தெரிவித்தது.பட்டா நிலத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் மிகவும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தலைவரின் சிலையை நிறுவ மனுதாரர் விரும்புகிறார். பட்டா நிலத்தில் சிலையை நிறுவ அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. ஒருவர் பொது வழிபாட்டிற்காக மத வழிபாட்டுத்தலம் அமைக்க விரும்பினால், கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சிலைகளை நிறுவுவது தொடர்பாக அத்தகைய சட்டம் அல்லது விதிகள் இல்லாததால், சிலையை நிறுவும் ஒருவரின் உரிமையில் குறுக்கிட முடியாது. சமுதாயக்கூட வளாகத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை நிறுவ மனுதாரருக்கு உரிமை உள்ளது. இவ்வாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு டிச.,16 க்கு ஒத்திவைத்தது.
22-Nov-2024