உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் கிரிவலம் செல்ல சிமென்ட் ரோடு முதல்வருக்கு மனு

குன்றத்தில் கிரிவலம் செல்ல சிமென்ட் ரோடு முதல்வருக்கு மனு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவல ரோட்டில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளோம் என சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்ய பிரியா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. மலையைச் சுற்றியுள்ள மூன்றே கால் கி.மீ., கிரிவலப் பாதையில் சிமென்ட் சாலை அமைக்க முதல்வரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை அமைச்சர் சேகர்பாபு மூலம் முதல்வரிடம் அளித்துள்ளோம்.இருபது ஆண்டுகளுக்கு முன், திருப்பரங்குன்றம் நகராட்சியாக இருந்தபோது 2 கி.மீ., தார்சாலை, ஒன்றே கால் கி.மீ., சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இங்குள்ள கிரிவலப் பாதை முழுவதும் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். எனவே, அதில் சிமென்ட் சாலை அமைக்க முதல்வரிடம் மனு அளித்துள்ளோம்.இது குறித்து மாநகராட்சி கமிஷனரிடமும் ஆலோசனை நடத்தினோம். இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறினார். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ