உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிபில் ஸ்கோர் பார்த்து விவசாயிகளுக்கு கடன் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

சிபில் ஸ்கோர் பார்த்து விவசாயிகளுக்கு கடன் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.உமாராணி, பொன்மணி, ரம்யா ஆகியோர் '2024ல் நடந்த நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர்.அவர்கள் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் 12 ஆண்டுகளில் தகுதி தேர்வு மட்டும் 4 முறை நடத்தியுள்ளது. இதுவரை எந்தவொரு காலிப்பணியிடமும் நிரப்பவில்லை. கடைசியாக 2024ல் நடந்த தேர்வில் 2768 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் காலிப்பணியிடம் உள்ள நிலையில், குறைந்த அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்றனர்.

விவசாய கடனுக்கு சிபில் ஸ்கோர்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை பொதுச் செயலாளர் நேதாஜி அளித்த மனு: விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் பார்க்க வேண்டும் என அரசு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத சூழலை ஏற்படுத்தும். இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ