உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடுவது ஜனநாயக கடமை

மரக்கன்று நடுவது ஜனநாயக கடமை

மதுரை: 'மரம் நடுவது அடிப்படை உரிமை, ஜனநாயக கடமை' என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் மதுரையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம், மரக்கன்று நடும் விழாவில் பேசினார்.சட்ட ஆணையக் குழு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் வரவேற்றார். நீதிபதி இளந்திரையன் பேசியதாவது: மரம் நடுவது அனைவரின் ஜனநாயக கடமை. அடிப்படை சட்டங்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து பெண்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற முடியும். எந்த வகையான மரம், எதற்காக பயன்படுகிறது என அறிந்து வளர்த்தால் இன்னும் சிறப்பு. துறை சார்ந்து வளர்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். ஊராட்சித்துறையுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வளர்ச்சி கிடைக்கும். ரோட்டோரம் மரங்கள் நிறைய வெட்டபடுகின்றன. தேவையான, பயன்தரக்கூடிய மரங்களை நட வேண்டும் என்றார்.சார்பு நீதிபதி சரவண செந்தில்குமார் நன்றி கூறினார். டி.ஆர்.ஓ., அன்பழகன், எஸ்.பி., அரவிந்த், மாவட்ட வன அலுவலர் தருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !