உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 60 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த போலீஸ் குடும்பங்கள்

60 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த போலீஸ் குடும்பங்கள்

மதுரை: மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்த போலீசாரின் குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தனர். இங்கு மதுரை, ராமநாதபுரம் மாவட்ட போலீசார்குடும்பத்துடன் வசித்தனர். ஒருவருக்கொருவர் நட்பாக பழகினர்.அதை நினைவூட்டும் வகையில் குடும்ப உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி கள்ளந்திரியில் நடந்தது.100 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.குடியிருப்பு பகுதியில் சிறுவர்களாக வசித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !