உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து இடையூறாக, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.நகரில் திரும்பும் இடமெல்லாம் ஆக்கிரமிப்புகள். ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைப்பது, 'பார்க்கிங்' செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கே.கே.நகர் ஆர்ச் அருகில் மேலுார் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் இயங்கின. அதன் வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.இதன் எதிரொலியாக போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா உத்தரவுபடி, எஸ்.ஐ., சுரேஷ் தலைமையிலான போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர். இதற்கிடையே முக்கிய ரோடுகளில் போக்குவரத்து இடையூறாக, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி கமிஷனர் சித்ராவுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை