உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கவுன்சிலர் உட்பட 20 பேர் கைது மதுரை: மதிச்சியம் பகுதியில் ஒரு பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்குள் மோதல் இருந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. நேற்று மீண்டும் அந்த தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. அந்த பாதையை மீட்டுத்தரக்கோரி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் குமரவேல் தலைமையில் அக்கட்சியினர் மாநகராட்சி கமிஷனர் பங்களா முன் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். கமிஷனரிடம் மனு கொடுத்த பின்பு தான் செல்வோம் என மறுத்து முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து கவுன்சிலர் உட்பட 20 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்து விடுவித்தனர். கோஷ்டி மோதல்: பத்து பேர் காயம் எழுமலை: இங்கு ஒரே சமூகத்தின் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மகா காளியம்மன் கோயிலில் திருவிழா எடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடக்குத்தெரு, தெற்குத்தெரு என இருபிரிவாக மாறி அடுத்தடுத்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 2 பிரிவினர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. வடக்கு தெருவைச் சேர்ந்த பாண்டி 50, பாஸ்கர் 25, தமிழரசன் 25, பாண்டியம்மாள் 40, ராஜ்குமார் 44, சரஸ்வதி 60, ஆகிய 6 பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். தெற்குத் தெருவைச் சேர்ந்த வாசிமலைக்கண்ணன் 25, சேகர் 58. வேலுத்தாய் 52, பாண்டி 40 ஆகிய 4 பேர் காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். எழுமலை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ