மேலும் செய்திகள்
காங்கேயம் இன மாடுகள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
15-Dec-2025
மதுரை: தமிழகத்தில் குளிர்காலம் காரணமாக மின்நுகர்வு 22 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 17 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது என மின்சிக்கன வார விழாவில் மண்டல தலைமைப் பொறியாளர் பழனிசாமி பேசினார். மதுரை மின்வாரிய மண்டல அலுவலகத்தில் மதுரை நகர் மின்பகிர்மான வட்டம் சார்பில் மின்சிக்கன வார தொடக்க விழா நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் ரெஜினா ராஜகுமாரி முன்னிலை வகித்தார். தலைமை பொறியாளர் பழனிசாமி மின் சிக்கன விழிப்புணர்வு வாகனத்தை துவங்கி வைத்தார். அவர் பேசியதாவது: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியம், மின்சார வாகனங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் கோடை காலத்தில் 20 முதல் 22 ஆயிரம் மெகாவாட் வரை மின்நுகர்வு இருக்கும். தற்போது குளிர்காலம் நிலவுவதால் 17 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் மூலம் பெருமளவு பணம், மின்சாரம் சிக்கனமாகும். மின் சிக்கனம், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றார். மின்வாரியம் சார்பில் மின்சிக்கனம் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க ப்பட்டன.கண்காணிப்பு பொறியாளர் பத்மாவதி, செயற்பொறியாளர்கள் பாலபரமேஸ்வரி, சோபியா இம்மானுவே ல், நிலமதி, விஜிலென்ஸ் கண்காணிப்பு பொறியாளர் கலாவதி பங்கேற்றனர்.
15-Dec-2025